திருவாரூர் ஆட்சியர் அலுவலக கருத்தரங்க கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, தலைமையில் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர்-2023 மாத இயல்பான மழையளவு 175.28 மி.மீ. ஆகும். நடப்பாண்டில் டிசம்பர் மாதத்தில் 108.56 மி.மீ மழை பெறப்பட்டது.

27.12.2023 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.09 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1098 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து வினாடிக்கு 253. கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
2023-24-ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் 36,914 ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,53,808 ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9,742 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 2,00,464 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

அதில் குறுவை பருவத்தில் 19,681 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும் 41,101 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 9,311 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 70,093 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது சம்பா பருவத்தில் 35,769 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 30,079 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 9,582 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 75,430 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தாளடி பருவத்தில் 12,395.6 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 39,512.25 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 17,446 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 69,353.9 ஹெக்டேரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

2023-2024ஆம் ஆண்டில் உளுந்து 36,700 ஹெக்டேரிலும், பச்சைப்பயறு 50,000 ஹெக்டேரிலும்; ஆக மொத்தம் 86,700 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் காரீப் பருவத்தில் 762 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும், ராபி பருவத்தில் 696 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும் ஆக மொத்தம் 1458 ஹெக்டேரில் உளுந்து செய்யப்பட்டுள்ளது.

2023-2024ஆம் ஆண்டில் நிலக்கடலை 4,480 ஹெக்டேரிலும், எள் 2,530 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 84 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடியும், 88 ஹெக்டேரில் எள் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2023-2024ஆம் ஆண்டில் பருத்தி 14,000 ஹெக்டேரிலும் கரும்பு 120 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 85 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திட்டத்தின் கீழ் 41476 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு 15 தவணைகளாக தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

பி.எம்.கிசான் திட்ட வழிகாட்டுதலின்படி பயனாளிகள் தொடர்ந்து தங்கள் தவணைத்தொகை பெற்றிட இ-கே.ஒய்.சி பதிவேற்றம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இதுவரை 2053 பயனாளிகள் இத்திட்டத்தில் இ-கே.ஒய்.சி பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளனர் எனவே தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம் அல்லது பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டும் இ-கே.ஒய்.சி செய்யலாம். மேலும், பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தகுதியுள்ள விவசாயிகளை இணைத்திட கிராம அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மூகாம் 15.01.2024. அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
எனவே விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை அணுகி இதுவரை பதிவு செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் பதிவு செய்திடவும் மற்றும் பி.எம்.கிசான் முகசெயலி மூலம் விவசாயி கண் சிமிட்டல் மூலம் எளிமையாக இ-கே.ஒய்.சி பணியினை விரைவில் முடிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் இதன் மூலம் பி.எம்.கிசான் திட்ட அடுத்த தவணைத் தொகையை தொடர்ந்து விவசாயிகள் பெற இயலும் என தெரிவிக்கப்படுகிறது

மேலும் இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 3059 விவசாயிகள் ஆதார் எண் விவரத்தை வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். திட்டத்தில் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்திட கேட்டுக்கொள்ளப் படுகிறது.

இதுவரை 514 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளனர் பணிகளை முடித்தால் மட்டுமே பி.எம்.கிசான் நிதி தொடர்ந்து விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்படும என தெரிவிக்கப்படுகிறது

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு வட்டார அளவிலான வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர. தெரிவித்தார்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் வேளாண்மைதுறை இணை இயக்குநர் ஏழுமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயலெட்சுமி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *