ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூரில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் என் என் எஸ் சிறப்பு முகாம் மாவட்ட தொடர்பு அலுவலர் ஆய்வு

திருவாரூர் அரசு உதவி பெறும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் சிறப்புமுகாம் தேவர்கண்டநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வருவதை நாட்டுநலப்பணித்திட்ட திருவாரூர் மாவட்ட தொடர்பு அலுவலர் என். இராஜப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பள்ளியின் திட்ட அலுவலர் கணேசன் உடன் இருந்தார் தொடர்ந்து மாவட்ட தொடர்பு அலுவலர் பேசும்போது குறிப்பிட்டதாவது
பள்ளிக்கூடத்தில் பல்வேறு கல்வி இணை செயல்பாடுகள் இருந்தாலும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு என் எஸ் எஸ் மட்டுமே. சுதந்திரம் பெற்ற பின் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால் 1950ல் வடிவமைக்கப்பட்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1969 செப்டம்பர் 24ஆம் தேதி இத்திட்டம் பல்கலைக்கழகத்தில் தொடங்கி பின்னர் 1980 இல் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது இன்று மிகப்பெரிய மாணவர் பேரியக்கமாக இந்தியா முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது எனக்கல்ல உனக்காக என்கிற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக சேவை மூலம் ஆளுமை பண்பை வளர்க்கும் அரிய செயல் திட்டம் தான் என் எஸ் எஸ். வாழ்க்கையில் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் மாணவர்களாகிய நீங்கள் கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேறும் பொழுது வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை வெற்றிகரமாக சந்திக்கவும் இந்த முகாம்கள் தான் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். 15 ஆண்டுகளாக பெற்றோரின் அரவணைப்பில் இருந்த நீங்கள் இங்கு ஒரு வாரம் தனியே பிரிந்து தங்கி இருந்து புதிய சூழலை
எதிர்கொள்கிறீர்கள் இங்கு ஒரு குழுவாக செயல்பட்டு புதிய அனுபவங்களை புதிய செய்திகளை விழிப்புணர்வுகளை பல்வேறு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறீர்கள் இவை உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது 45 பள்ளிகளில் என் எஸ் எஸ் செயல்பட்டு வருகிறது மீதமுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வருகின்ற நாட்களில் என் எஸ் எஸ் தொடங்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்டத்தில் அனைத்து மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் இந்த அரிய வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காகத்தான் கிராமங்களுக்குச் சென்று ஊருக்கு தேவையான நல்ல தொண்டுகளை செய்யுங்கள் மேலும் கிராமத்தில் நீங்கள் ஒரு சிறு சர்வே கூட எடுக்கலாம் இந்த பகுதியில் அல்லது உங்கள் வீட்டின் அருகில் . படிப்பை பாதியில் நிறுத்திய. மாணவ இளைஞர்கள் இருந்தால் அவர்கள் பற்றி விவரங்களை சேகரித்து அவர்கள் குறித்த விவரங்களை உங்கள் திட்ட அலுவலரிடம் தெரிவித்து தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யலாம் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்
மாணவர்களாகிய நீங்கள் கல்வியிலும் சிறந்து விளங்கி மனித நேயத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்து சிறப்பான வாழ்க்கை பெற வாழ்த்துகிறேன் என்று பேசினார் முன்னதாக திட்ட அலுவலர் முத்தையா வரவேற்றார் இறுதியாக உதவி திட்ட அலுவலர் அருணாசலம் நன்றி கூறினார்
வி எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் சிறப்பு முகாம் நடைபெறும் பவித்திரமாணிக் கத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *