வலங்கைமான் குடவாசல் ஒன்றியத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்ஒன்றியம் சித்தன்வாளூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்கரை குச்சி பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் 2022- 2024 நிதி ஆண்டில் ரூபாய் 33 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம், வேலங்குடி ஊராட்சி, வடகரை ஆலத்தூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ரூபாய் 32 லட்சத்து80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை காணொலி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார், இதை எடுத்து திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. தட்சிணாமூர்த்தி, ஒன்றிய ஆணையர் சுப்புலட்சுமி, ஒன்றிய ஆணையர் (கி. ஊ) பிரகாஷ், வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, சித்தன்வாலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா, வேலங்குடி ஊராட்சி தலைவர் நடராஜன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீரமணி, நாகலட்சுமி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் பள்ளி புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர். பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதே போல குடவாசல் ஒன்றியம் அண்ணவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு, குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் 2022- 2024 நிதி ஆண்டில் ரூபாய் 33 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை காணொலி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். குடவாசல் ஒன்றிய ஆணையர் பாஸ்கர், வட்டார கல்வி அலுவலர் குமரேசன் முன்னிலையில், ஒன்றிய குழு துணைத் தலைவர் தென் கோவன் புதிய பள்ளி கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், பள்ளி தலைமையாசிரியர் சித்ரா கலந்து கொண்டார், பள்ளிக்கு கட்டிடம் பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *