கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் எலும்பு தொடர்பான ஆர்த்தோ மற்றும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது..

பல்வேறு சவாலான நோய்களுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் இடுப்பு எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சை எடுத்து செல்கின்றனர்..

இந்நிலையில்,பாராதைராய்டு தொடர்பான அரிய வகை நோய் பாதித்த நோயாளி ஒருவருக்கு சிகிச்சை வழங்கியது தொடர்பாக, மருத்துவமனையின் இயக்குனரும், எலும்பு முறிவு மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தண்டபாணி செய்தியாளர்களிடம் பேசினார்..

அப்போது பேசிய அவர், இலட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும்,இந்த நோய் பாதித்த கோபியை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு கால் எலும்புகளும் பலவீனமடைந்து நடக்க முடியாமல் இருந்த நிலையில் அவரை பரிசோதித்த போது பாராதைராய்டு சுரப்பதை கண்டதாக கூறிய அவர்,உடனடியாக அவருக்கு எலும்பு அறுவை சிகிச்சையுடன் சேர்த்து,பாராதைராய்டு கட்டியை கழுத்தில் இருந்து நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்தார்..

தற்போது அவர் நன்றாக இருப்பதாகவும்,யாருடைய உதவியும் இன்றி நடப்பதாக அவர் கூறினார்..

தொடர்ந்து பேசிய அவர்,எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சையில் பல்வேறு விதமான நவீன சிகிச்சை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் இடுப்பு எலும்பு முறிவு,மூட்டு தொடர்பான சிகிச்சைகளை நவீன முறையில் வழங்க தனிப்பிரிவு மருத்துவமனையில் இருப்பதாக அவர் கூறினார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *