எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் உர தொழிற்சாலையை மூட வலியுறுத்தி எட்டு நாட்களாக மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டடு தொழிற்சாலை முன்பு அமர்ந்து ஆதரவு தெரிவித்தார் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் பகுதியில் தொழிற்சாலையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து அவரிடம் கூறினர்

அதன் பின்னர் தொழிற்சாலையிலிருந்து அமோனியா கசிவு வெளியான பகுதியில் சென்று பார்வையிட்டு அமோனிய கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார் இதில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மண்டல துணைச் செயலாளர் ஜான் அலெக்சாண்டர், வழக்கறிஞர் பாலாஜி, கமல், நீலமேல வளவன், தமிழரசன் உட்பட கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *