அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யோக உணவுகள் வழங்கப்பட்டு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய இடங்களில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. பாலமேட்டில் ஜனவரி 16ம் தேதியும் அலங்காநல்லூரில் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இரண்டு இடங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கக்கூடிய ஆர்வலர்கள் தங்களது காளையை சிறந்த காளையாக மாற்றுவதற்காக பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர் .

இதில் ஒரு பகுதியாக காளைகளுக்கு அதிக உற்சாகம் ஏற்படுத்தக்கூடி மண்ணைக் குத்தும் பயிற்சி ,
நடை பயிற்சி ,நீச்சல் பயிற்சி, உள்ளிட்ட பிரத்தியோகமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த உடல் தகுதிக்காக சிறப்பு உணவுகளான மக்காச்சோளம், நாட்டுக்கோழி, பேரிச்சம்பழம். முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு ,உள்ளிட்ட உயர்தரமிக்க உணவு பொருளை வழங்கி வருகின்றனர் .

இது குறித்து தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக காளை வளர்த்து வரக்கூடிய
அய்யூர் நடராஜன் மற்றும் கணேசன் ஆகியோர் கூறியதாவது
ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறக்கூடிய நாட்களில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஜல்லிக்கட்டு காளைகளை தயார் படுத்த வேண்டும் அடிக்கடி ஜல்லிக்கட்டு காளைகளை கலந்து கொள்ள செய்ய வேண்டுமானால் அதற்கான பிரத்தியோக பயிற்சிகள் உணவுகள் முறையாக வழங்க வேண்டும்.

அதுதான் காளைகளுக்கு தேவையான உடல்வாகும் கூட்டத்தில் எதிர்த்து போராடிவெளியே வரக்கூடிய தகுதிஏற்படும் என்று தெரிவித்தார். மேலும் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் முறையில் பதிவு செய்தாலும் உள்ளூர் காளைகளுக்கு தகுதி அடிப்படையில் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *