திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே சங்கர் தலைமையில் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி வரவேற்றார், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி ஊ ) பிரகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்டிடம் பழுதடைந்து,தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு சுற்றி கம்பி வேலிகள் அமைப்பது மற்றும் நிர்வாக செலவினங்கள் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரபாகரன், தாமரைச் செல்வம், ரசூல்நஸ்ரின், காந்திமதி உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியபொறியாளர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *