நாமக்கல் பா.ம.க மத்திய மாவட்டம் பரமத்தி வேலூரில் உழவர் பேரியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டம் மத்திய மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில உழவர் பேரியக்கத்தின் மாநில துணை செயலாளர் பொன் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார்

இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே தமிழக அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்காக அளவெடுத்து வருகின்றனர்

இதனை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் தொழில் பேட்டை கட்டக்கூடாது எனவும்

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

அதற்கு பா. ம. க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது

மேலும் வருகின்ற 6ஆம் தேதி உழவர் பேரியக்கத்தின் சார்பில் பரமத்தி வேலூர் பகுதியில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதற்கு பா. ம. க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

இந்த செயற்குழு கூட்டத்திற்கு அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் மாநில உழவர் பேரிக்கத் தலைவர் பொன் ரமேஷ் மாவட்ட தலைவர் தினேஷ் பாண்டியன் உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் சதாசிவம் வன்னியர் சங்க தலைவர் சித்தார்த்தன் மாவட்ட அமைப்பு செயலாளர் ராமநாதன். மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர். சரவணன் போத்தனூர் குமார். மோகனூர் ஒன்றிய துணை சேர்மன் பிரதாப் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் உழவர் பேரியக்கத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *