ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் . திருவாரூர் மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அந்தந்த வட்டார அலுவலகம் முன்பு நடைபெற்றது

தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை என்ற அடிப்படையில் புதிதாக வெளியிட்டுள்ள அரசாணை 243ஐ திரும்பப் பெற்று பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் ஆகியவற்றிற்கு பழைய நடைமுறையில் ஒன்றிய அளவிலான முன்னுரிமை இருத்தல் வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையில் இரண்டு ஆண்டு காலமாக பதவி உயர்வு வழங்காமல் தகுதித் தேர்வை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வினை உடனடியாக பழைய நடைமுறையிலே வழங்கிட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு, அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகை, உயர்கல்வி படித்தவர்களுக்கு பின்னேற்பு அனுமதி,உயர்கல்வி படிப்பிற்கு ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்.
எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். இந்த பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார் வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஈ.வே.ரா . உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் நன்னிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார் வட்டாரச் செயலாளர் பிரகாஷ் முன்னிலை வைத்தார் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர்
கொரடாச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார் வட்டாரச் செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார் மாவட்டச் செயலாளர் ஈ.வே.ரா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் குடவாசலில் உள்ள நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் மேகநாதன் தலைமை வகித்தார் மேனாள் மாவட்ட. துணைச் செயலாளர் சிவக்குமார் வட்டாரச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் வேதரத்தினம் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சுபாஷ் வட்டாரச் செயலாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினர் முத்துப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சரவணன் தலைமை வகித்தார்
ஆர்ப்பாட்டத்தில் வட்டாரச் செயலாளர் செல்வசிதம்பரம் வட்டாரப் பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினர் மன்னார்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகரச் தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் வட்டாரச் செயலாளர் பாலகிருஷ்ணன் நகரச் செயலாளர் மார்ட்டின் வஜ்ரசிங் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர் நீடாமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார்
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ் வட்டாரச் செயலாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் கோட்டூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் தங்கபாபு தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வமணி தமிழ்வாணன் வட்டாரச் செயலாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வலங்கைமானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார்
ஆர்ப்பாட்டத்தில் வட்டாரச் செயலாளர் சரவணகுமார் மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் மாநில அளவிலான முன்னுரிமை என்ற இனிப்பு சுவையை பூசி பிரித்தாளும் சூழ்ச்சியில் அரசு ஈடுபட்டுள்ளது இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டதாரி தலைமையாசிரியர் பதவி உயர்வுகளை நிரப்ப முன்வராத நிலையில் பதவி உயர்வுக்கான புதிய அணுகுமுறைகளை வெளியிட்டுள்ளது
எமிஸ் வலைதள பதிவேற்ற பணிகளில் இருந்து ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்கிறோம் என்று வாக்குறுதி அளித்தும் இந்நாள் வரை என்ன செய்வதென்று சொல்வதென்று தெரியாமல் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு தொடக்க கல்வி கூட்டணி ஆசிரிய ஆசிரியைகள் தங்களின் கண்டனத்தை முழக்கமிட்டனர்