சத்தியமங்கலம்
தாளவாடியில் சட்டமன்றத் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வழங்கப்பட்டுள்ள 1 கோடி 20 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிதிட்ட பணிகளை எம்எல்ஏ பண்ணாரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

சத்தியமங்கலம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாளவாடி மலைப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாளவாடி,கும்டாபுரம்,திகினாரை,தொட்டமுதுகரை,இக்கலூர்,நெய்தாளபுரம்,கோடிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் பணிகள், காங்கிரீட் சாலைகள், குடிநீர் திட்ட பணிகள், நியாய விலை கடை கட்டுதல்,பயணியர் நிழற்குடை கட்டுதல் உள்ளிட்ட 1 கோடி 20 லட்சம் மதிப்பிலான
வளர்ச்சித்திட்ட பணிகளை பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ. பண்ணாரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக தாளவாடி ஒன்றிய செயலாளர்கள் சிக்கன்பாபு ,மாதேஸா, சதீஷா சத்தி ஒன்றிய செயலாளர் சி .என். மாரப்பன் நிர்வாகிகள் கேபிள் பாபு,நாகேந்திரன், அப்துல் நதீம் ,
வினய், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,
ஊராட்சி மன்ற தலைவர்கள்,கவுன்சிலர்கள், பொதுமக்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *