கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவில் மணிகண்ட சிவாச்சாரியார் ஆலயத்தில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டமைப்பின் நிறுவனர், அகில இந்திய பொதுச்செயலாளர் கலிபோர்னியா சிவஸ்ரீ. எஸ்.சுவாமிநாத சிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது மற்றும் ஆதி சைவ சிவாச்சாரியார்ககளின் மாநாடு நடத்துவது,நலத்திட்ட உதவிகள் கொடுப்பது தொடர்பாக கலந்தோசிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.சுவாமிநாத சிவம்,தமிழகத்திலுள்ள முக்கிய சைவ மற்றும் வைணவ கோயில்கள் ஆகமங்களின்படி கட்டப்பட்டுள்ளன.ஆகமங்களின்படியே வழிபாடுகள் நடக்கின்றன. சைவ கோவில்களை பொறுத்தவரை சிவாச்சாரியார்கள்,குருக்கள்,ஆதி சைவர்கள்,பட்டர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும்.

வைணவ கோவில்களில் வைகானச பட்டாச்சாரியார்கள் பூஜைகள் செய்யலாம்.தற்போது கொண்டு வந்துள்ள அனைத்து ஜாதியனர் ர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது ஏற்கனவே இந்த வழிமுறை படி உள்ளது. இது புதிய சட்டம் அல்ல என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *