மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் டெக் காலா எக்ஸ்போ- 2024 கண்காட்சி…..
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்ரமணியன் பங்கேற்பு ….

மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் டெக் காலா எக்ஸ்போ- 2024 கண்காட்சி நடைபெற்றது, மங்கையர்க்கரசி கல்வி குழுமங்களின் செயலாளர் டாக்டர் அசோக் குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் என். சிவசுப்ரமணியன் மற்றும், கே.எல்.என் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பொறியாளர் டாக்டர் பி. உதயகுமார் , சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி முதல்வர் கவிதா கண்காட்சியை தொடங்கி வைத்தார், மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப் பள்ளியின் இயக்குநர் டாக்டர் முத்துராஜு, பள்ளி தலைமையாசிரியர் ஆர்.தமிழ்செல்வி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் விஞ்ஞானி என்.சிவசுப்பிர
மணியனுடன் மாணவர்கள் கலந்துரையாடினர். பெற்றோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர்.
கண்காட்சியில், ATAL ஆய்வகம் சென்சார்கள், Arduino UNO, ரோபோடிக் கார்கள், அறிவியல் பரிசோதனைகள், சுற்றுச்சூழல் அறிவியல், சமூக அறிவியல், கணிதம், மொழி மாதிரிகள், வர்த்தகம் மற்றும் வணிகம் மற்றும் குழந்தைகளின் விவரிப்பு போன்ற அனைத்து பாடங்களிலும் பன்முகத் திறமையை வெளிப்படுத்தினர். இது படைப்பாற்றல், கற்பனை மற்றும் நுண்ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தது.

இந்நிகழ்வை சாத்தியமாக்குவதற்கு ஒன்றாக உழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு அளப்பரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *