சீர்காழியில் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த தனியார் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு. புகைப்படம் எடுத்து விளையாடி தங்களது பழைய நினைவுகளை கூறி மகிழ்ந்தனர். தாங்கள் படித்த பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 125 ஆண்டுகளை கடந்த சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சீர்காழி கடைவீதியில் இயங்கி வரும் இக்கல்வி நிறுவனத்தில் கடந்த 1973 – 74ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ – மாணவிகள் 65 பேர் 50 ஆண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதன்படி நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அப்போது பள்ளியில் பயின்று தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாற்றி ஓய்வு பெற்று சிலர் தொழில்கள் செய்தும் வருகின்றனர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக முன்னாள் மாணவ மாணவிகள் தைவான், மலேசியா, மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று சீர்காழி உள்ள தாங்கள் படித்த பள்ளிக்கு வருகை புரிந்தனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மொத்தமாக ஒருவரை ஒருவர் மீண்டும் சந்தித்துக் கொண்ட போது அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் உடன் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர் தங்கள் கணவர் மற்றும் மனைவிகள் குழந்தைகள் பேரன் குழந்தைகளை அறிமுகப்படுத்திக் கொண்டும் தங்களது நண்பர்களின் குடும்பங்களை தெரிந்து கொண்டும் தங்களை பற்றிய விவரங்களை பொறுப்புடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்கள் குடும்பத்துடன் தங்களை முழுமையாக குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்கள் மலரும் நினைவுகளை பேசினர். பின்னர் முன்னால் மாணவ மாணவிகளாய் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் தங்கள் படித்த பள்ளியின் பெஞ்சுகளில் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டும் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்தும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார். மதிய உணவு ஒன்றாக அமர்ந்து உணவருந்திய மாணவ மாணவிகள் பின்னர் பொழுதுபோக்காக சிறு விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு விளையாடினார் பிற்பகலில் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர் ஆசிரியர்களை வரவழைத்து அவர்களை கௌரவப்படுத்தி அவர்களுடனான தங்கள் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து பேசினர் தாங்கள் படித்த பள்ளியில் ஒன்றிணைந்தோம் நிகழ்வைக் கொண்டாடினோம் என்று இல்லாமல் தங்கள் படித்த பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்துக் கொடுத்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்ததோடு ஆண்டுதோறும் அதனை பழுது ஏற்படாமல் பராமரிக்கவும் குறிப்பிட்ட தொகையினையும் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடன் கல்வி பயின்ற சக நண்பர்கள் மீண்டும் சந்தித்தது தங்களுக்கு இந்த வயதில் புத்துணர்ச்சியும் மனதுக்கு இளமையும் தருவதாக பரவசத்துடன் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *