அன்பின் மணிக்குடைக்குள் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியே சாந்திகிரி ஆசிரம செயல்பாடு – அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதம்.

செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் சாந்திகிரி ஆசிரமம்,ஜாதி, மத பேதமின்றி, அன்பின் மணிக்குடைக்குள் மக்களை இணைக்கும் முயற்சியையே செய்து வருகிறது என, தமிழக மாநில பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

செய்யூர் கிளை ஆசிரமத்தில் நடைபெற்ற
வெள்ளி விழா மாநாட்டை அமைச்சர் தொடங்கி வைத்து பேசியபோது, தமிழகம் சிறந்த ஆன்மீக பாரம்பரியம் கொண்டது. திருவள்ளுவரும், 18 சித்தர்களும் உலகிற்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. வேதாந்தம், ஆன்மிகக் கோட்பாடுகள் பற்றிப் பேசும்போது இத்தமிழ் நாட்டைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது என்றும், கடவுள் மனித இதயத்தில் இருக்கிறார் என்றும் இவ்வகை ஆன்மிகக் கொள்கைகளின் கருத்துக்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இவ்விழாவில்கேரள மாநில உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அணில் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ கருணாகரகுரு உலகிற்கு அமைதிச் செய்தியை வழங்கியதாகவும், குருவின் சீடர்களான சந்நியாசிகள் சமூகத்தால் மிகவும் நேசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டின் சாந்திகிரியின் புதிய சேவை திட்டமான மக்கள் நலம்என்ற இலவச சித்த மருத்துவ முகாம்களை நடிகர் தலைவாசல் விஜய் தொடங்கி வைத்தார். மிசோரம் முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நடிகர் தலைவாசல் விஜய்,ஏ.வி.ஏ குழும நிறுவனங்களின் தலைவர் ஏ.வி.அனூப் ஆகியோருக்கு ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி சாந்திகிரி வெள்ளி விழா விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

விழாவில் சுவாமி சைதன்யா, சுவாமி நிர்மோகாத்மா, சுவாமி ஸ்நேகாத்மா, பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் சென்னை ஆர்ச்டியோசீஸ் டாக்டர். சாமுவேல் மார் தியோபிலிஸ், சகோதரி ஜான்சி பிரம்மகுமாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சித்தா இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாமில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

சாந்திகிரி சித்தா கல்லூரி முதல்வர் டாக்டர் டி.கே.சௌந்தரராஜன், டாக்டர். ஜனனி ஷ்யாமரூப ஞான தபஸ்வினி, டாக்டர் ஜனனி அனுகாம்பா ஞான தபஸ்வினி,மருத்துவர்கள் ஜே.நினப்ரியா, ஆர்.புவனேந்திரன், பிரகாஷ் பாஸ்கர்.எஸ்,கலைசெல்வி பாலகிருஷ்ணன், தேசிய நிறுவன மருத்துவர்கள் எம்.ஆர்.சீனிவாசன், கே.திருஞானம், எம்.தமிழி,ராகுல்ராஜ் நவீன்.டெபோரல், ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை பரிந்துரைகளை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *