ஆழந்த இரங்கல்.இனியநண்பர் கவிஞர் இளவல் ஹரிஹரன் காலமானார்.தமிழ்நாடு அரசு நடத்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைப்போட்டியில் பொற்கிழி விருது பெற்ற நூறில் ஒருவர்.தாய்மொழி செளராஸ்டிரமாக. இருந்தாலும் தமிழ்மொழி மீது பற்று மிக்கவர்.பல நூல்கள் எழுதி இலக்கியப் பணியாற்றியவர்.

பத்திரப்பதிவுத்துறையில் உயர்பதவி வகித்தபோதும்.எல்லோருடனும் எளிமையாகப் பழகிய பண்பாளர். “வெளிச்சத்தை வெளிக்கொணருவோம் “கவிதைத்தொகுப்பு நூலில் என் கவிதையும் இடம்பெறச்செய்து இலக்கிய உலகில் என்னை அறிமுகம் செய்தவர்.

என்னை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த குரு.தொகுப்பு நூலில் இடம்பெற்ற என் கவிதையை புதுத்தகம் பகுதியில் குமுதம் வாரஇதழில் பிரசுரம் செய்தனர்.மிகுந்த சோகத்தில் உள்ளேன்.இவரது காதல்கவிதை நூலிற்கு அணிந்துரையும்,மற்ற நூல்களுக்கு மதிப்புரையும் எழதி இணையங்களில் பதிந்துள்ளேன்.

மாமதுரைக்கவிஞர் பேரவை நடத்திய கவிதைப்போட்டியில் பரிசும் விருதும் கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் கரங்களில்பெற்று,தென்னாவனார் தலைமையில் கவியரங்கம் கலந்துகொண்டு கவிதை பாடியவர்.தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களிடம் நூல்களுக்கு அணிந்துரை பெற்றவர். இவரது தம்பி கோபிநாத் ( சிறந்த பத்திர எழுத்தர்)நல்ல நண்பர்.இவரது மைத்துனர் சந்திரமோகன் மதுரை விமான நிலையத்தில் என்னுடன் பணிபுரிந்தவர்.

ஏர்இந்தியாவில் பணியாற்றவர்.இவரது மனைவி லோகவதி அவர்கள் இல்லம் சென்றால் இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பார்கள்.அனைவருக்கும் ஆறுதல்.குடும்ப நண்பரை இழந்தவிட்டேன்.இன்று காலை இனியநண்பர் எழுத்துவேந்தர் இந்திரா செளந்தரராஜன் அலைபேசியில் அழைத்து அதிர்ச்சியையும்,ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்கள்.கவிஞர் இரா.இரவி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *