பாபநாசம் அருகே விழுதியூரில் குடியிருப்புகளை இடிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு …..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பாபநாசம் – சாலியமங்கலம் இடையே விழுதியூர் கிராமத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் 22 நபர்கள் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை
கிளை உத்தரவின்படி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு அருகில் குடியிருக்க வீட்டுமனை பட்டா வழங்கினர்.

குடியிருப்பவர்கள் வீட்டுமனை பட்டாவை வாங்க மறுத்தனர் உடனே அதிகாரிகள் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை ஒவ்வொரு வீட்டின் முன்பு ஒட்டி சென்றனர்.

இதனால் அப்பகுதியில் குடியிருந்து வரும் கிராம மக்கள் குடியிருப்பதற்கு மாற்று இடம் ஏற்படுத்தி தந்துவிட்டு அகற்றுமாறு தெரிவித்தனர்

இதனால் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது ..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *