மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி மோகன். இவர் தனது ஏழ்மை நிலையிலும் குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் நிலையிலும் கடந்த 15 ஆண்டுகளாக பாரதிமோகன் அறக்கட்டளை எனத் தொடங்கி பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்குதல், மனநலம் பாதிக்கப்பட்டோரை முடி திருத்தம் செய்து புதிய ஆடை வழங்கி அவர்களை பாதுகாப்பாக காப்பகங்களில் கொண்டு சேர்த்தல், ஆதரவற்ற நிலையில் வீடு இன்றி தவிக்கும் முதியோர்க்கு வீடு கட்டி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறாரே.இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 நாட்களுக்கு மேலாக நேரில் சென்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கினார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுக்கா கொருங்கனி பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் கூரை வீடு மழை வெள்ளத்தால் தரைமட்டமானது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முத்துலட்சுமிக்கு அந்த நிலையை பார்த்த பாரதி மோகன் உடனடியாக தனது நண்பர்கள் உதவியுடன் வீடு கட்டி கொடுக்க முடிவு செய்து பல நாட்கள் அங்கேயே தங்கி கான்கிரீட் ஸ்லாப் கொண்டு வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வீட்டினை கட்டி முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தார்.

தனது அறக்கட்டளை சேர்ந்த பலருடன் இரவு பகலாக நின்று வீட்டினை கட்டி முடித்து முத்துலட்சுமியிடம் வழங்கிய போது எங்கிருந்தோ வந்து எதிர்பார்க்காத அளவில் வீட்டினை கட்டி வழங்கியதோடு வீட்டிற்கு தேவையான கிரைண்டர் மிக்ஸி ஃபேன் பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார்.

இந்நிலையில் சமூக சேவகர் பாரதி மோகனிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் முத்துலட்சுமி. இந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்ட மக்களையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பலரும் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தனது ஏழ்மை நிலையிலும் விடாமுயற்சியில் பலருக்கு உதவி வரும் சமூக சேவகர் பாரதிமோகனை தொடர்ந்து சேவைகளை செய்ய வாழ்த்தியுள்ளனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *