தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக தண்ணீரில் சாய்ந்து கிடக்கும் சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாரான பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,கொள்ளிடம், தரங்கம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 8000 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூர், கிள்ளியூர்,தலச்சங்காடு, பிச்சைக்கட்டளை,ஆக்கூர் திருமெய்ஞானம், மாமாக்குடி ஆகிய. சுற்றுவட்டார பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி மமழைநீரில் சாந்துள்ளது. மேட்டூர் தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காத நிலையிலும் இப்பகுதி விவசாயிகள் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை இரவை பாசம் பெற்று ஒருபோக சம்பா சாகுபடியை செய்துள்ளனர்.

இன்னும் 10 முதல் 15 தினங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் நேற்றைய மழையால் இரண்டாவது நாளாக தண்ணீரில் சாய்ந்து கிடப்பது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தாழ்வான பகுதி என்பதால் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உரிய மகசூல் கிடைக்காது என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *