பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே
கபிஸ்தலம் மற்றும் அய்யம்பேட்டை பகுதிகளில் 300 கிலோ குட்கா பறிமுதல்.

இரண்டு நபர்களை கைது செய்த போலீசார்..
குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் கைப்பற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கபிஸ்தலம் அருகே உள்ள வன்னியடி கிராமம் வடக்குதெருவை சேர்ந்த விக்னேஷ் (32) இடம் விசாரணை செய்ததில் அவர் குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
அவர் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட குட்கா, விமல் பாக்கு, புகையிலை உள்ளிட்ட 70 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
அதேபோல் அய்யம்பேட்டை பாக்குதோப்பு மைதீன் நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போது சையது அகமது(46) என்பவர் விற்பனைக்காக 234 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் நான்கு சக்கர, இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து சையது அகமதுவை கைது செய்தனர்.