தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணமும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ,பொங்கல் பரிசு தொகை ரூ 1000 உள்ளிட்ட தொகுப்புகளை 700-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு
வழங்கும் விழா திருப்பனந்தாள் அருகே குறிச்சி ஊராட்சியில் நடைப்பெற்றது.

விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மிசா மனோகரன், கோ.க. அண்ணாதுரை உதயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தலைமை அரசு கொறடா கோவி.செழியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

நிகழ்ச் சியில் கோட்டாட்சியர் பூர்ணிமா,துணைத் தலைவர் ரேவதி மாரியப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலகுரு,ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி கோபு,ஊராட்சி செயலாளர் பூமிநாதன், வட்ட வழங்கல் அதிகாரிகள்,தொடக்க வேளாண்மை
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *