வலங்கைமான் சேனியர் தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி 52 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராம பவனத்தில் ஜெயவீர ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி 52 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணிக்கு ஸ்ரீ ராம பவனத்தில், ஸ்ரீ ராமபவன் ஆஸ்தான வித்துவான் நாதஸ்வர இளம் தென்றல், சுககான திலகம் வலங்கைமான் வி.எம். பாலசுப்பிரமணியன், வலங்கைமான் எஸ். யு. பி. அருண்குமார் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,ஸ்ரீஆஞ்சநேயர் ஹோமம், திருமஞ்சனம், மகா தீபாராதனைகளை சிதம்பரம் சிவஸ்ரீ சந்திர பாலசுப்பிரமணிய சைவாச்சாரியார் சிறப்பாக செய்து இருந்தார்,

அதனைத் தொடர்ந்து வெள்ளி கவசம் சாற்றுதல் நடைபெற்றது. இன்று புதன்கிழமை காலை ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஜெயந்தி விழாவை ஒட்டி சுவாமிமலை ஸ்ரீ ராமானுஜ கூட பஜனை குழுவினர், அய்யம்பேட்டை ஸ்ரீமத் வெங்கட்ரமணா பஜனை குழுவினர், அம்மாபேட்டை ஸ்ரீ டி ஆர் நாராயணசாமி பாகவதர் குழுவினர்,கும்பகோணம் ஸ்ரீ ஜெயலட்சுமி விலாச பஜனை சபா குழுவினர் மற்றும் தமிழகத்தின் சிறப்புமிக்க தவில், நாதஸ்வர கலைஞர்கள் குழுவினருடன் சாரட் வாகனத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது,

பகல் ஒரு மணி அளவில் தீபாராதனை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வலங்கைமான் ஆஞ்சநேயர் தாசன் என். ராமச்சந்திரன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர், நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *