திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட. திருவாரூர் தெற்கு வீதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
தமிழக முதலமைச்சர் தமிழக மக்களின் நலன் காக்கின்ற வகையில் மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில், தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை தமிழர்களும் எதிர்வரும் தைத்திருநாளினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழகத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்;பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் அறிவித்து தொடங்கி வைத்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் முழுநேர நியாயவிலைக்கடைகள் 592, பகுதிநேர நியாயவிலைக்கடைகள் 182 என மொத்தம் 774 நியாயவிலைக்கடைகள் மூலம் 3,89,732 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு தேவையான. நிதி ஒதுக்கீடு ஆணையிடப்பட்டுள்ளது

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பச்சரிசி மற்றும் சக்கரை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு ஏற்கனவே நகர்வு செய்யப்பட்டுள்ளது கரும்பு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து நியாயவிலைக்கடைகளுக்கும் நகர்வு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்புகள் 10.01.2024 முதல் 14.01.2024 வரை நியாயவிலைக் கடைகளின் பணி நாட்களில் சுழற்சி முறையில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையிலும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் வழங்கப்படுமென மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.

நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கே.சித்ரா துணை பதிவாளர்(பொது விநியோக திட்டம்) பாத்திமா சுல்தானா மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் செல்வி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மாவட்ட வழங்கல் அலுவலர் கயல்விழி திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், திருவாரூர் நகர்மன்ற துணை தலைவர் அகிலா சந்திரசேகர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் இரா சங்கர் நகரமன்ற உறுப்பினர்கள் டி செந்தில் வாரை பிரகாஷ் வரதராஜன் அன்பழகன் திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொது மேலாளர் காளிதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *