கோவை

சாலை பாதுகாப்பு குறித்து டிரினிட்டி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி..

கோவை மாநகரத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியரை அவர்களது பெற்றோர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கி விட்டு செல்லும் போதும், மீண்டும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமலும் சீட் பெல்ட் மற்றும் தலைகவசம் அணியாமல் சிலர் சென்று வந்தனர்.

இதனிடைய கோவை மாநகர காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 21 நாட்கள் சவால் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டது.

இதில் கோவை மாநகரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு தங்கள் மாணவ, மாணவியருக்கும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை முழுமையாக கடைபிடிக்க வலியுறுத்தியும், அதனை செயல்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் துறையினருடன் இணைந்து இராமநாதபுரம் டிரினிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி தாளாளர் ஜோசப்புத்தூர், முதல்வர் டாக்டர் தனலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் மது போதையில் வாகனம் ஓட்டகூடாது,ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்,உள்ளிட்ட பல்வேறு விதமான சாலை விதிகள் கொண்ட பதாகைகள் எந்தியபடி 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மனித சங்கிலியாக நின்று கோசங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *