சீர்காழி பெஸ்ட் கல்வி குழுமம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய உடை அணிந்து கோலாட்டம், ஆடல் பாடல், சிலம்பம், கபடி என மகிழ்சியுடன் கொண்டாடிய மாணவ மாணவிகள்.

சீர்காழி பெஸ்ட் கல்வி குழுமம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சட்டை, அணிந்தும், மாணவிகள் பாவாடை, தாவணி, சேலை அணிந்து கொண்டும் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

மேலும் மாணவ மாணவிகள் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கபடி போன்ற விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் தலைமை வகித்தார். பெஸ்ட் கல்வி குழுமங்களின் இயக்குனர் அமுதா நடராஜன் முன்னிலை வகித்தார். பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். நிர்வாக அதிகாரி சீனிவாசன் மற்றும் பள்ளி துணை முதல்வர்கள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *