மதுரையில் பழைய பாத்திர கடையில் இருந்து மீட்கப்பட்ட பாண்டியர் மன்னர்களின் செப்பேடு….

மதுரையில் உள்ள பழைய பாத்திர கடையில் இருந்து மீட்கப்பட்ட இளையான்புதூர் செப்பேடுதான் பாண்டியர் மன்னர்களின் செப்பேடுகளில் காலத்தால் (கி.பி. 676) பழமையானவை. தீயில் எரித்தது போக மிச்சமிருந்த ஓலைச்சுவடிகள் கிடைத்ததால்தான் 1812 ம் ஆண்டு முதன்முதலாக உலக பொதுமறை என்றழைக்கப்படும் திருக்குறள் நூலக அச்சேறியது. வைகையாற்றில் துணி துவைக்கும் சலவை கல்லாக இருந்த கல்வெட்டு ஒன்றுதான் கி.பி 690 ல் வைகை கிருதுமால் நதி இணைப்பு பற்றி பேசும் வரலாற்று ஆவணமாக மாறியது.

இராமநாதபுரம் கீழக்கரையில் கிடைத்த கல்வெட்டு தான் கரிகாலன் கட்டிய கல்லணையை அடையாளம் காட்டியது. கல்வெட்டுகள் இல்லையென்றால் வரலாற்று ஆய்வாளர்களால் மாமன்னன் அசோகன் என்று ஒருவர் இருந்தார் என்பதை கண்டுபிடித்திருக்க முடியாது.

வரலாற்று ஆவணங்கள் பற்றிய புரிதலற்ற காலத்தில் ஓலைச்சுவடிகள் எரிக்கப்பட்டதும், கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டதும் வியப்பில்லை. ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்று ஆவணங்கள் இன்றும் கவனிப்பாரற்று கிடப்பது வேதனையாக உள்ளது.

15 ம் நூற்றாண்டில் சபர்மதி ஆற்றங்ககரையில் கட்டியெழுப்பப்பட்ட குஜராத் மாநிலத்தின் அகமதாபாது நகரம் பாரம்பரிய நகரமாக யுனெசுகோவால் தேர்ந்தெடுக்கப்
பட்டிருக்கிறது. வைகையாற்றங்கரையில் மூவாயிரமாண்டு களாக இயங்கும் மதுரையில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டு ஒன்று இடையபட்டி – தெற்காமூர் சாலையோர கழிவுநீரோடையின் அருகே கிடக்கிறது. பொறுப்புணர்வோடு இதனை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *