நாமக்கல் மாவட்டம்

திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் ஆண்டாள் திருகல்யாணம் நிகழ்வகள் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினர்.

இவ்விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள ஒவ்வொரு துறையின் சார்பாக மாணவிகள் பொங்கல் வைத்து இயற்கை தெய்வங்களான பஞ்சபூதங்களுக்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர்.

இதில் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக, நடைபெற்ற ஆண்டாள் அழகர் திருமணத்தில், பல்வேறு துறை சார்ந்த மாணவிகள் முளைப்பாரி மற்றும் சீர்தட்டுக்களுடன் மேளதாளம் முழங்க ஸ்ரீவித்யாவிநாயகர் கோயிலுக்கு ஆண்டாள் அழகர் வேடமிட்ட மாணவிகளுடன் அணிவகுத்தவந்திருந்தனர். பின்னர் ஆண்டாள் அழகர் திருமண வைபவம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி , மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணவேணிகருணாநிதி , துணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத்தாளாளர் டாக்டர் கிருபாநிதி , இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி அவர்கள், விவேகானந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் முனைவர் குப்புசாமி , முதன்மை நிர்வாகி மீ.சொக்கலிங்கம் ,திறன் மேம்பாட்டு இயக்குனர் முனைவர் குமாரவேல், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.பேபிஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், தேர்வாணையர் முனைவர் பத்மநாபன், இயக்குநர் முனைவர் மேனகா, வணிகவியல் துறையின் இயக்குநர் சசிக்குமார் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் பிற கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ஸ்ரீதர் ராஜா தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கவிதா, மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *