மதுரை மீனாட்சியம்மன் கோயில் தைப்பூசத்தெப்பத் திருவிழா துவங்கியது….

வருடந்தோறும் தை மாதத்தில் தைப்பூசத் தெப்பத் திருவிழா நடைபெறும். திருமலைநாயக்கர் மன்னரால் மண்டகப்படி ஏற்படுத்தப்பட்டு இன்று வரை அது அரசு மண்டகப்படியாக நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தினத்தில் அம்பாள், சுவாமி இத்தெப்பக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி காலை இரு முறையும் மாலை ஒரு முறையும் தெப்பத்தை சுற்றி வருவர்.

இத்திருவிழாவினை காண ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கூடுவார்கள். திருவிழா தினத்தன்று மாலையில் அம்பாள், சுவாமி மைய மண்டபத்தில் எழுந்தருளி மைய மண்டபத்தில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் பரிவட்டம் கட்டி மண்டகப்படி நடைபெறும்.

தெப்பத்திருவிழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி விவரப்படி, இன்று 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 25ம் தேதி முடிய நடைபெறவுள்ளது. மேற்படி நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடன், இருவேளைகளிலும், நான்கு சித்திரை வீதிகளிலும், மேலும் உற்சவ பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி புறப்பாடாகி திருவீதி உலா வருவர்.
இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் 25ம் தேதி அதிகாலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் இத்திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி, இத்திருக்கோயிலுக்குசொந்தமான, மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து, மேற்படி தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து, காலையில் இரண்டு முறை சுற்றி வந்தும், மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பத்தி உலாத்திதீபாராதனை நடைபெற்று, மீண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் தெப்பம் சுற்றி வரும்.மேலும், வரும் 25ம் தேதி அன்று அதிகாலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலிருந்து, மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பம் உற்சவம் நடைபெற்று,

இரவு திருக்கோயிலுக்கு வந்து சேரும் வரை அன்றைய தினம் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மேற்படி நாளில் பக்தர்கள் நலன் கருதியும், வெளியூர் களிலிருந்து வருபவர் களின் நலன் கருதி யும் கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்படும். உள்ளே வருபவர்கள் வடக்கு கோபுரம் வாசல் வழியாக காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அனுமதிக்கப்
படுவார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *