பாபநாசத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் . 107ஆவது பிறந்தநாள் விழா …

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகர அ.தி.மு.க சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 ஆவது பிறந்தநாள் விழா பாபநாசம் கடை வீதியில் நடைபெற்றது.

பாபநாசம் நகர அ.தி.மு.க செயலாளர் கோவி. சின்னையன் தலைமை வகித்து எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் .

நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய தலைவர் சபேசன், பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் , நகரத் தலைவர் அப்துல் காதர், நகரத் துணைச் செயலாளர் அன்பழகன், பாபநாசம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சரவணன், செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் மணி ,அப்துல் ரசீது ,வார்டு செயலாளர்கள் ஜெம்புலிங்கம், ஜான் பிரிட்டோ, காசிநாதன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் பத்மநாதன் மற்றும் வார்டு செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *