சீர்காழி அருகே அஞ்சலி சமூக சேவை தொண்டு நிறுவனம் சார்பாக ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி நிறைவு விழா பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒன்றிய அரசின் MSME DFO அலுவலகம் சென்னை மற்றும் அஞ்சலி சமூக சேவை தொண்டு நிறுவனம், இணைந்து நடத்திய மகளிருக்கான ஆறு வார கால இலவச தையல் பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது.

இதில் சீர்காழி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100 கற்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு ஆறு வார கால தையல் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் அஞ்சலி சமூக சேவை தொண்டு நிறுவன தலைவர் கருணாநிதி துவக்க உரை நிகழ்த்தினார் அறக்கட்டளையின் செயலாளர் சரோஜா கருணாநிதி வரவேற்புரை நிகழ்த்தினார்

இந்நிகழ்வில்MSMEதுணை இயக்குனர் R.செந்தில்குமார் அவர்கள்MSME திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் M. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் HDFC வங்கிமேலாளர் திரு கோவிந்தராஜ் அவர்கள்தொழில் துவங்க கடன் உதவிகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள் இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலர் ராதா அவர்களும் குருமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள் மாணவிகளுக்கு தையல் பயிற்சி வழங்கிய C.சுப சித்ரா தேவி அவர்களும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கதிரவன் சாவித்திரி கலந்துகொண்டனர் நிறைவாக ஆசிரியர்K.வீரபாண்டியன் நன்றி நன்றி உரை ஆற்றினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *