2024- க்கான இறுதி வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2024 ம் நாளினைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம், 2024- க்கான இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டார்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2023 நாளன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் 26,37,601 ஆகும். தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம், 2024 இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,77,220 ஆகும். இதில் 13,15,866 ஆண் வாக்காளர்களும், 13,61,094 பெண் வாக்காளர்களும், மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 260 நபர்கள் உள்ளனர். இதில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்,2024-ன்படி சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 61,011 மற்றும் இறப்பு, இடமாற்றம், ஒருமுறைக்கும் மேலான பதிவுகள், ஆகியவற்றின்படி நீக்கம் செய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,392. தற்போது மதுரை மாவட்டத்தில் 189. மதுரை கிழக்கு சட்டமன்றத்தொகுதி 3,38,557 அதிகமான வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத்தொகுதியாகவும், 190.சோழவந்தான் (தனி) சட்டமன்றத்தொகுதி 2,22,537 குறைவான வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதியாகவும் உள்ளது, என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *