பாபநாசத்தில் 14 ஆவது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு காசில்லா வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் …..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இயங்கி வரும் விவேகானந்தா சமூக தொண்டு நிறுவனம் சார்பில்
14வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் சங்க தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது.

சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கண்ணன்,
பாபநாசம் வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர் கம்பன்,சங்க செயலாளர் தங்க.கண்ணதாசன் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், வழக்கறிஞர்கள், சார் பதிவாளர் அலுவலக பணியாளர்கள், பிஎஸ்என்எல் அலுவலக ஊழியர்கள், காவல்துறை நண்பர்கள் மற்றும் பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை, நூறு சதம் வாக்களிப்போம், ஜனநாயகம் காப்போம், வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம், இலவசங்களை முற்றிலும் தவிர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *