அங்கமென சமுதாய சொந்தம்என நிகழ்வுகளை!

பங்கம் ஒன்றும் வாராமல் பகிர்ந்திடுவோம் மக்களிடம்!

நெஞ்சமதில் ஓராயிரம் சோகங்கள் இருந்தாலும்!

புயல்மழை பெருவெள்ளம் சூழ் நின்ற போதினிலும்!

முயல்போல் விரைந்தங்கு முன்னின்று உதவிடுவோம்!

கயல்விழி கன்னியர்கள் வலம்வரும் சினிமாக்கள்!

இயலாமல் கிராமத்தில் இருந்துவரும் அறிவார்கள்!

முன்னேற துணை நிற்போம் முழு மூச்சாய் நாம் உழைப்போம் !

கண்ணீரில் அள்ளாடும் அவலங்கள் மாறிடவே!

பன்னீரில் நீராடும் செல்வந்தர் உணர்ந்திடவே!

செய்திகள் படிக்கவைத்து உதவிகள் செய்யவைப்போம்!

கொள்ளும்நோய் கொரோனா காலத்தில்
களம்நின்று!

இல்லங்கள் தம்செல்வங்கள் எதையும் கருதாமல்!

தன்னுயிரை துச்சம் என தாங்கி நின்று செய்திகளை!

இன்னுயிரை கொடுத்தும் தியாகங்கள் செய்கின்றோம்!

அரசியல் அடியாட்கள் அடிக்கடி தாக்கிடினும்!

விரசமென செல்லாமல் வீறு நடை போடுகின்றோம்!

அரசாலும் தகையோர்கள் தடுப்பதற்கு வர வேண்டும்!

முறையான சட்டத்திற்கு முழு வடிவம் தர வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *