கும்பகோணத்தில் யோக மஹோத்ஸவம் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி கலந்து கொண்டார்.

கும்பகோணம்

கும்பகோணத்தில் இந்திய கலச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து யோக மஹோத்ஸவம் கும்பகோணம்
ராயா மஹாலில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் நிர்வாகி
கோபால கிருஷ்ணன், தலைமை தாங்கினார்.
முத்து சைக்கிள் மார்ட் இயக்குனர் சீனிவாசன், அபிராமி ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹார்ட்புல்னெஸ் சார்பில் மூன்று நாட்கள் நடைப்பெற்ற பயிற்சியில் ஓய்வு நிலை தியானம்
பயிற்சி, புத்துணர்வு, பயிற்சி, உடலும், உள்ளமும் நலம் பெற யோக ஆசனம், மூச்சுப்பயிற்சி
கூடிய தியானம்,முத்திரைகள் எளிய யோக பயிற்சிகள்,உள்முக ஆற்றலுடன் இணைக்கும்
தியான பயிற்சி,குழந்தைகளின் மூளைத் திறனை மேம்படுத்தும் பயிற்சி
அளித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர்
லிங்குசாமி, கும்பகோணம் துணை சூப்பிரண்டு கீர்த்தி வாசன், மருதம் லயன்ஸ் சங்க தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர்.

அப்போது இயக்குனர் லிங்குசாமி
கலந்து கொண்டு பேசியதாவது:-

ஆன்மிகம் முன்பே தோன்றியது தியானம்,தியானம் என்பது மனக்கணக்கு,கடவுளிடம் என்ன கேட்க வேண்டும் கடவுளேயே கேட்க வேண்டும் அனைவரும் உண்மையான அற்புதங்களை தியானம் மூலம் பெறலாம்.சொல்லும்,செயலும் அரிதாக இருக்கும் காலங்களில் என்னுடைய கடுமையான காலங்களில் தண்ணீர் விழுந்து விடலாமா? என தேடும் காலங்களில் தியானம்என்னை வழிப்படுத்தியது.
நல்ல சிந்தனைகளை ஆழ் மனதை தேடி போவது தான் தியானம்.

இவ்வாறு அவர் பேசினார் நிகழ்ச்சியில் திராளான ஆண்கள் பெண்கள், சிறுவர்கர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *