பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி திருப்பாலைத்துறை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதோடு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது

பேச்சுவார்த்தை கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் காவல் ஆய்வாளர்கள் வருவாய் ஆய்வாளர் பேரூராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் போராட்டக்காரர்களுடன்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்

அப்போது திருப்பாலைத்துறை கிராமத்தில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் பழைய குப்பைகளை பயோ மைனிக் முறையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அளவீடு செய்து அரசு நிதி பெற்று ஒப்பந்த புள்ளி நடவடிக்கைகள் மேற்கொண்டு மூன்று முதல் நான்கு மாத காலத்திற்குள் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேற்படி குப்பை கிடங்கில் கொட்டப்படும் தினசரி குப்பைகளை அன்றைய தினமே தரம் பிரித்து படிப்படியாக குப்பைகளை இரண்டு மாத கால அளவிற்குள் குறைத்திட பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *