மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாரயணன் அவர்கள் வழிகாட்டுதலின் படி 20வது நாளாக சாலைபாதுகாப்பு மாதத்தில் இலவச பொது மருத்துவ முகாம் வண்டியூர் சுங்கச்சாவடியில் வைத்து நடத்தப்பட்டது.

இம்முகாமினை மதுரை வட்டாரப்போக்குவரத்து அலுவலர் சித்ரா தலைமையில் மதுரை வேலம்மாள் மருத்துமனை மருத்துவ குழுவினரால் இம்முகாம் நடத்தப்பட்டது.

இம்மருத்துவ முகாமில் தனியார், மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், மற்றும் பொதுமக்கள் பயனடையும் விதமாக வண்டியூர் சுங்கச்சாவடி வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் ஆகியோருக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

பொதுமருத்துவ முகாமில் சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டு இரத்தத்தின் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் தேவையான நபர்களுக்கு நுஊபு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ குழுவினரால் ஆலோசனை வழங்கப்பட்டது.

இம்மருத்துவ முகாமில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், முரளி, சரவணக்குமார், செல்வம், சம்பத்குமார், சுகந்தி, மனோகரன் ஆகியோர் இணைந்து மதுரை மாவட்டத்தில் “தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்” விழா பொதுமக்களுடன் இணைந்து கொண்டாப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *