பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நில அளவைத்துறையை தொழில்நுட்ப துறையாக்கக் கோருதல்,வட்டத்துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்யக் கோருதல் ஆகிய பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5 வது மாநில மாநாடு 10.2.2024 சனிக்கிழமை சென்னை V. G. P ரிசார்ட் ல் நடைபெற உள்ளதன் காரணமாக,தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கத்தின்
தஞ்சாவூர் மாவட்ட மையம் சார்பாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாபநாசம் வட்ட அலுவலகம், தஞ்சாவூர் வட்ட அலுவலகம், கும்பகோணம் வட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் மாநாட்டு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு மாபெரும் அழைப்பு விடுத்துள்ளனர்.
நிகழ்வில் மாவட்ட தலைவர் சுதா,
மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்..