அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி துணை சேர்மனும் அதிமுக அம்மா பேரவை நகர செயலாளருமான ராம்ராஜ் இல்ல திருமண விழா செல்லத்தம்மன் கோவில் வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
ஆர்.பி. உதயகுமார், கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார் வருகை தந்த அவருக்கு மணவீட்டார் சார்பாக கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டது.

இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், நகர செயலாளர்கள் வி.கே.குமார், அழகுராஜ், அம்மா பேரவை மாநில நிர்வாகி வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, மற்றும் பாலமேடு மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, மற்றும் லெட்சுமணன், மனோகரன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *