வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளியின் இலக்கிய மன்ற விழா, பள்ளி விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம் தலைமை தாங்கினார்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் பா. சிவனேசன், மேலாண்மை குழு தலைவர் சு. சுமத்ரா, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோம. மாணிக்கவாசகம், ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் புலவர்சிவ.செல்லையன், பொருளாளர் எஸ். ஆர். ராஜேஷ், இணைச் செயலாளர் எஸ். ரவிச்சந்திரன், மேலாண்மை குழு துணைத் தலைவர் அ.சிவகாஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. நாவளவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பள்ளியின் பட்டதாரி ஆசிரியை உமையாள் ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க.தனித்தமிழ் மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மெய்யியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் கோ. ப. நல்லசிவம் இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்கள் வி. சி. ராஜேந்திரன், கே. கிருஷ்ணமூர்த்தி, எஸ். சத்தியமூர்த்தி,பா. ஆனந்த்,கே சரவணன், ஆர். மாரிசாமி, எஸ்.விஜய மோகன், கதிரவன், கே. எஸ்.பாலமுருகன்,கோ. காமராஜ், விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பா. வசந்தி,து.பரமசிவம், ப. சேகர், ரா. ராஜு, வே. சத்தியகலா,ப.சீதாள தேவி, சி.தீபாராணி, தி. உமையாள், பூ. பொன்மலர், ம. முத்துலட்சுமி, ஆ. விடிவெள்ளி, இ. பிரமிளா, மன காந்தி, கா.அனிதா வி.ராணி, பி.ரேவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, முடிவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா முடிவில் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் கி. சீனிவாசன் அனைவருக்கும் நன்றி கூறினார். மாணவர் நலனில் அக்கறையுடன் பரிசு பொருட்களை பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் வீ. பார்த்தசாரதி அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள், அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர், மாணவர்கள், பள்ளியின்பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளியின் மேலாண்மை குழுவினர் உள்பட பலர் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *