மதுரையில் ஒன்றிய மோடி தலைமை யிலான பா.ஜ.க அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து பொருட்கள், வேளாண் இடுபொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிட வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைத்திட வேண்டும். உணவு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்திடும் ரேஷன் விநியோகத்தை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும். தேசிய குறைந்தபட்ச ஊதிய மாதத்திற்கு 26 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020 ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும், தேசிய பணம் மக்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மின்சார திருத்த மசோதா 2022 திரும்பப் பெற வேண்டும், முன்பணம் செலுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும்.

100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றிற்கு ரூ 600 ஊதியம் வழங்க வேண்டும். நகர்புறத்திற்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை நான்கு தொகுப்பு சட்டங்களாக திருத்தியதை திரும்ப பெற வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை முற்றாக கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய நிதி ஆணையம் ஏற்படுத்தி முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக நலத் திட்டங்களை உறுதிப் படுத்த வேண்டும்

என்று மதுரை மாநகரில் சி.ஐ.டி.யு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, எல்பிஎப், எச்எம்எஸ், ஏ.ஐ.சி.சி.டி.யூ, டி.டி.எஸ்.எப், டி.யூ.சி.சி, எம்.எல்.எப், எல்.எல்.எப் ஆகிய தொழிற் சங்கங்கள் சார்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் இருந்து மதுரை ரயில் நிலைய சந்திப்பு வரை பேரணியாக சென்று மறியல் போராட்டம் எல்.பி.எப் மாவட்ட கவுன்சில் செயலாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் கண்ணன், எச்.எம்.எஸ் மாநில துணை தலைவர் பாதர் வெள்ளை, ஐ.என்.டி.யூ.சி மாவட்ட தலைவர் ராஜசேகர் டி.டி.எஸ்.எப் இணைப் பொதுச் செயலாளர் எஸ். சம்பத், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சேது, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் இரா. லெனின், எல்பிஎப் அரசு போக்குவரத்து செயலாளர் மேலூர் அல்போன்ஸ், எம்எல்எப் மாநில இணை பொதுச் செயலாளர் மகபூப் ஜான் ஆகியோர் மறியல் போராட்டத்தை விளக்கி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

இந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் விஜய ராஜன், துணை மேயர் நாகராஜன் மற்றும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்த 500 பெண்கள் உள்ளிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *