இந்து சேனா மாநில தலைவர் அருள்வேலன் ஜி தமிழக அரசிற்கு மிக முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன் முழு விபரம் பின்வருமாறு வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அவர்கள் ஓர் இந்து சமயத்தை சார்ந்த ஆன்மீகவாதி ஆவார்.”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”என்று பாடிய வள்ளல் பெருமான் 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் மக்களிடம் இருந்து பல ஏக்கர் நிலங்களை பெற்று மக்களின் நலனுக்காகவே “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்ற சங்கத்தினை நிறுவினார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார் அவர்கள் மக்களின் மிகுந்த வேதனைகளில் ஒன்றான பசியினை போக்க அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக இன்றும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.

அதே போல் வருடந்தோறும் பூசம் நட்சத்திரத்தில் ஏற்றப்படும் ஜோதி தரிசனம் காண தமிழகம் மட்டுமின்றி வேறு மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டில் இருந்தும் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.

உலகெங்கும் இருந்து இந்த ஜோதி தரிசனம் காண வருகின்ற பொதுமக்களின் நலனுக்காக உள்ள பெருவெளி பகுதியை தற்போது தமிழக அரசு வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்க முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளது என்று வெளிவந்துள்ள செய்தி பொதுமக்கள் அனைவரையும் வேதனை மற்றும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழக அரசு பெருவெளியில் அமைக்க முடிவு செய்துள்ள வள்ளல் பெருமான் பன்னாட்டு மையத்தினை உடனே பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத ஒரு சிறந்த இடத்தினை தேர்வு செய்து அதில் “வள்ளலார் பன்னாட்டு மையம் “அமைக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என பொதுமக்களின் சார்பாக தமிழக அரசிற்கு இந்து சேனா கோரிக்கை வைக்கிறது என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *