பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பெரியகுளத்தில் நகர் கழகம் சார்பில் அதிமுக அலுவலகத்தில் நகர செயலாளர் சி. பழனியப்பன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நகர அவை தலைவர் கோம்பையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர செயலாளர் சி. பழனியப்பன்
கூட்டத்தில் வருகின்ற 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்றும் நகர பகுதி முழுவதும் கட்சி கொடிகள் பேனர்கள் வால்போஸ்ட்கள் போன்றவற்றை நிறுவப்பட வேண்டும் என்றும் 30 வார்டு பகுதியிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானங்கள் வழங்கி அம்மா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன .

கூட்டத்தில் நகர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியை ,தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள், இளைஞர் அணி, மீனவர் அணி ,எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள், தொண்டரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *