வலங்கைமானில் நடக்க இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் வாபஸ்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா கோவிந்தகுடி ஊத்துக்காடு நல்லூர் அரசு மதுபான கடைகள் முக்கிய பிரதான சாலையில் இயங்கி கொண்டிருக்கிறது.

இதனால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள அரசு மதுபான கடைகளை அகற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறுவதாக ஏற்கனவே சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வலங்கைமான் தாசில்தார் ரசியாபேகம் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ். எம்.செந்தில்குமார், விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் கு. ராஜா முன்னிலையில் வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

மே ஒன்றாம் தேதிக்குள் மூணு கடைகளையும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லா இடத்தில் மாற்றுகிறோம் என்று சமாதான கூட்டத்தின் வாயிலாக ஒத்துக்கொண்டதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆவூர் துர்கா ரமேஷ், கோவிந்தகுடி ஜி.பி. மணிகண்டன்,தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்ன ராஜா, விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பிரபாகரன்,விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய பொருளாளர் மருதையன்,கிளைச் செயலாளர்கள் காருக்குடி பரமசிவம், கோவிந்த குடி மகேந்திரன், ரகுபதி, மோகன் மற்றும் நல்லூர், கோவிந்தகுடி, ஊத்துக்காடு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *