திண்டிவனம் அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுதன் சொந்த செலவில் தரை பாலம் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர் ஆகியவற்றை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய கீழ் கூடலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஈச்சேரி சேகர், இவர் இ.என்.எஸ் தமிழ்நாடு மக்கள் சேவை இயக்கத்தை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த அண்டபட்டு கிராம மக்கள் அந்த பகுதியில் தரை பாலம் அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பலமுறை மனு அளித்ததாக கூறப்படுகிறது.

மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கிராம மக்கள் கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் பயன்பாட்டிற்காக தனது சொந்த செலவில் 13 லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலம் கட்டப்பட்டு அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மேலும் அதே கிராமத்தில் விவசாயம் அதிக அளவில் நடைபெறுவதால் அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் 13 லட்சம் மதிப்பீட்டில் இலவசமாக டிராக்டர் மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் தல 25 கிலோ அரிசி மற்றும் கிராமத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கு நிதி உதவி, தெரு மின் விளக்குகள் ஆகியவற்றை நிறுவனத் தலைவர் இ.என்.எஸ் சேகர் வழங்கினார். தரைப்பாலம் மற்றும் டிராக்டர், நலத்திட்ட உதவிகள் வழங்கிய அவரை அண்டப்பட்டு கிராம மக்கள் மனதாரப் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *