வலங்கைமானில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலங்கைமான் கிளையின் சார்பில் முப்பெரும் கலை இலக்கிய விழா-2024 நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குச்சிப்பாளையத் தெருவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலங்கைமான் கிளையின் சார்பில் முப்பெரும் கலை இலக்கிய விழா-2024 நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமுஎகச கிளைத் தலைவர் கோ.பாலசுந்தரம் தலைமை வகித்தார், கிளைச் செயலாளர் அந்தோணி பாஸ்கர் அனைவரையும் வரவேற்று பேசினார், மாவட்டத் துணைத் தலைவர் சு அம்பிகாபதி தொடக்க உரையாற்றினார்.

தமிழ் தாத்தா உ வே சா சமயம் கடந்த இலக்கிய ஆளுமை என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் கவிஞர் நா முத்துநிலவன், விடுதலைப் போராட்ட வீரர் தகைசால் தமிழர் தோழர் என் சங்கரய்யா ஒரு நூற்றாண்டு சகாப்தம் என்ற தலைப்பில் த மு எ க ச மேனாள் மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் கவிஞர் வெ. ஜீவக்குமார். கவிஞர் தமிழ் ஒளி வாழ்வும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மேனாள் மாநில தலைவர் கவிஞர் மு சௌந்தர்ராஜன் ஆகியோர் உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ஜீ. வெங்கடேசன் வாழ்த்தி பேசினார்.

மாவட்ட துணைத் தலைவர் சு. அம்பிகாபதி, சி ஐ டி யு மாநில குழு உறுப்பினர் பிரேமா, கவிஞர் புவனேஸ்வரி, புலவர் மாணிக்கவேல் இளங்கோவன் ஆகியோர் பாடல், கவிதை, சிலம்பம் , பறையிசை ஆட்டம் என ஏராளமான கலை இலக்கிய நிகழ்ச்சிகளோடு கலை இரவு கலை கட்டியது. இறுதியில் உ வே சா பிறந்த தினமான பிப்ரவரி-19 சங்க நூல்கள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். வலங்கைமானில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலகத்திற்கு உ வே சா அவர்களின் பெயரைச் சூட்டி அவரின் திருவுருவ சிலையையும் நிறுவி திறப்பு விழா நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் வட்டாரப் பொருளாளர் வே. சின்னத்துரை அனைவருக்கும் நன்றி உரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *