திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாத்தா டாக்டர்.உ.வே.சா அவர்களின் நினைவு இல்லத்தில் 170வது பிறந்தநாள் விழாவையொட்டி அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் உடனிருந்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
உலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் ஹீப்ரு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து இன்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிலும் தமிழ் மொழி மட்டும் தான் எக்காலத்திலும் இலக்கியமாகவும், மக்கள் பயன்பாட்டு மொழியாகவும் தொடர்ந்து விளங்கி வருகின்றது தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் ஒலைச்சுவடி வடிவில் இருந்த இலக்கியங்களை இன்றும் அனைவரும் படிக்கும் வகையில் புத்தக வடிவில் பதிப்பித்து சிறப்பான பணியை தமிழுக்காக ஆற்றி இருக்கின்றார்கள்தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ஒலைச்சுவடிகளில் இருந்து சங்க இலக்கியங்களை அச்சில் ஏற்றி சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர்.

ஒலைச்சுவடிகளை ஊர் ஊராக சென்று சேகரித்தவர். தீயில் எரிந்ததையும், தண்ணீரில் ஆற்று நீரில் சென்றதையும் எடுத்துப்பாதுகாத்து, ஒலை சுவடிகளில் இருந்த எழுத்துக்களை முறைப்படுத்தி இலக்கியங்களை முழமையாக்கி கொடுத்து, ஆசிரியர் மாணவர் உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் உ.வே.சா ஆவார். இளைய தலைமுறையாகிய நீங்கள் வாழ்வில் பிறந்தோம் இருந்தோம் என்று இல்லாமல் பொதுத்தொண்டில் சிறந்து விளங்கவேண்டும். அதன் மூலம் தங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்லபெயரையும் பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்

நிகழ்ச்சியில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் திருவாரூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.தனபால், திருவாரூர் மாவட்ட நூலக அலுவலர் முருகன் வலங்கைமான் வட்டாட்சியர் ரஷியா பேகம் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலெட்சுமி சிவகுமார் உத்தமதானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.செங்குட்டுவன் தஞ்சை தமிழ் சங்க மாணவ மாணவிகள் தமிழ் சங்கத்தினர், மற்றும் தமிழ் மன்றம் பொது மக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *