திருப்பத்தூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா. மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய் கிழமை இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு பாரம்பரிய உணவுகளை பார்வையிட்டார். இதில் மகளிர் திட்ட இயக்குனர், பிரியா
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மிரியாம் ரெஜினா, உதவி திட்ட அலுவலர் உமா, சமூக நல விரிவாக்க அலுவலர் அம்சவேணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *