2024 நாடாளுமன்றத்தேர்தலில் மின்னணு வாக்கு முறையை ரத்து செய்திடவேண்டும் , வாக்கு சீட்டு முறையை நடைபெறபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் ரயில்வே சந்திப்பு முகப்பு வாயிலில் திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அறிவிப்பின்படி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குமுறையை ரத்து செய்திட வேண்டும் , வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியதேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக மோடிஅரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்கட்சியின் மைய மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன்வடக்குமாவட்ட செயலாளர் தமிழோவியா , தெற்கு மாவட்டசெயலாளர் வெற்றி , ஆகியோர் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மா.வடிவழகன் வித.செல்வன் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் முல்லைவளவன் சட்டமன்ற தொகுதிசெயலாளர் நிலவன் , மண்ணை சட்டமன்ற தொகுதி துணைச்செயலாளர் ஆதவன்
முன்னிலையில்
மேலிடபொறுப்பாளர் வழக்கறிஞர் வேலுகுணவேந்தன் ஒருங்கிணைப்பாளர் என்டி. இடிமுரசுஆகியோர் கண்டன உரையாற்றினார் திருவாரூர் நகரச் செயலாளர் பொன் ஆசைதம்பி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தஅனைவருக்கும் நன்றி உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர்மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட, சட்டமன்ற ஒன்றிய, நகர மற்றும் துணைநிலை அமைப்புகளின் முன்னணி பொறுப்பாளர்கள் முகாம் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *