மதுரையில் காணாமல் போன ரூ.45 லட்சம் மதிப்பிலான 348 செல்போன்கள் மீட்பு!
உரியவர்களிடம் மாநகர காவல் ஆணையர் ஒப்படைத்தார்!!

மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 348 செல் போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டு மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் 348 செல்போன்கள் மீட்கப்பட்டன (கோவில் சரகம் 56, தெற்குவாசல் சரகம் 07, திருப்பரங்குன்றம் சரகம் 08, அவனியா புரம் சரகம் 13, திடீர்நகர் சரகம் 53, திலகர் திடல் சரம் 02, தல்லாகுளம் சரகம் 78,செல்லூர் சரகம் 29, அண்ணாநகர் சரகம்102, மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் மாநகர மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு, தலைமையிடம் மற்றும் போக்குவரத்து ஆகியோர் முன்னிலை யில் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ45,24,000 ‘ஆகும்.