மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உலக நன்மை வேண்டி 31 ஆம் ஆண்டு 1508 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வானக்காரத் தெருவில் உள்ள பழமைவாய்ந்த காளியம்மன் கோவில் மாசி மாதம் திருவிழா கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. உலக நன்மை வேண்டி 31 ஆம் ஆண்டு 1508 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் பங்கேற்று சுமங்கலியாக நீண்டகாலம் வாழ வேண்டியும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், புதிதாக திருமணம் நடைபெற்ற பெண்கள் குழந்தைவரம் வேண்டியும், நல்ல உடல் நலம், சகல செல்வமும் கிடைக்க வேண்டியும்.
உலகம் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் பஞ்சபூதங்கள் சிறப்பாக அமைய வேண்டி திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கிற்கு பூக்கள் வைத்தும், வெற்றிலை, பாக்கு இவைகளை திருவிளக்கு முன்பு காளியம்மன் திருஉருவ படத்தினை வைத்து குங்குமத்தால் 1008 நாமங்களைால் அர்ச்சனை செய்து அம்மனுக்கு தீபாராதனை காண்பித்தனர்.
பின்னர் சுமங்கலி பெண்கள் குங்குமத்தை ஒருவருக்கொருவர் பரிமாரிக்கொண்டனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.