கபிஸ்தலம் அருகே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா..

மகளிருக்கான கோலப் போட்டியில் 100-க்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவங்கள் பொரிக்கப்பட்ட கோலங்கள் போட்டு அசத்தல்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே, இரமானுஜபுரம் தோப்புத் தெருவில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு மகளிர்க்கான கோலப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கிராம பெண்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு சாலைகள் முழுவதிலும் ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கோலங்கள், இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட கோலங்கள் போன்ற விதவிதமான 100-க்கும் மேற்பட்ட கோலங்களை போட்டு அசத்தினர். இறுதியில் சிறந்த கோலங்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளும் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *